Saturday, May 22, 2010

விஜய் படங்களுக்குத் தடை?

தொடர் பிளாப் படங்களால் பெரும் நஷ்டம்- விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

விஜய் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதோடு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருவதால் நடிகர் விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நடித்து ஆதி, போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் போக்கிரி மெகா ஹிட். ஆனால் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவையாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

தொடர்ந்து விஜய் படங்கள் தோல்வியைத் ஒவ்வொரு முறை விஜய் படம் தோல்வியுறும்போதும், நஷ்டத்தை சந்திப்பவர்கள் தியேட்டர் உரிமையாளர்கள்தான். விநியோகஸ்தர்களை விட இவர்களுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படுகிறதாம்.

இந்த நஷ்டக் கணக்கை விஜய் தரப்பிடம் கூறும்போதெல்லாம் அடுத்த படத்தில் சமாளித்து விடலாம் என்று ஆறுதல் கூறப்படுமாம். ஆனால் வருகிற அத்தனை படங்களும் தோல்விப் படமாகவே இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து மூன்று படங்களும் பெரும் தோல்விப் படங்களாக தியேட்டர் உரிமையாளர்களால் கூறப்படுகின்றன. இதனால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம்.

இதையடுத்து சில முடிவுகளுக்கு அவர்கள் வரவுள்ளனராம். இதுகுறித்து நாளை சென்னையில் கூடி ஆலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளனராம்.

அவர்கள் தற்போது எடுத்துள்ள முடிவுளாக கூறப்படுபவை என்னவென்றால், நஷ்டங்களை சரிக்கட்டும் வகையில் ஒரு படத்தை நடித்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் தியேட்டர் உரிமையாளர்களுக்காக ஒரு படத்தில் விஜய் நடிக்க வேண்டும்.

தியேட்டர் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் விஜய் நடந்து கொள்ளாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது, அவரது படங்களைத் திரையிடுவதில்லை என்ற முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்துள்ளனராம்.

தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவரது ஒரே மாதிரியான நடிப்பு அவரது ரசிகர்களையே சலிப்படைய வைத்துள்ளது. இந்த நிலையில் பெரும் பணத்தை செலவழித்து தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள் எப்படி முன் வருவார்கள். எனவே விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டால் மட்டுமே இனி அவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும், மற்றவர்களின் நஷ்டமும் முடிவுக்கு வரும் என தியேட்டர் உரி்மையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

தியேட்டர் அதிபர்களின் இந்த நடவடிக்கையால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment