Monday, July 5, 2010

உலக கோப்பை கால்பந்து : சர்ச்சை கிளப்பும் நடுவர்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை நடுவர்களின் தவறான தீர்ப்புகள் தொடருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் லாம்பார்டு அடித்த பந்து, "கோல் லைனை' தாண்டிச் சென்றது. ஆனால், உருகுவே நடுவர் ஜார்ஜ் லாரியண்டோ நிராகரித்தார். இதனால் அதிர்ந்து போன இங்கிலாந்து அணி தோல்வி அடைய நேரிட்டது.

இதற்கு பின் நடந்த அர்ஜென்டினா-மெக்சிகோ இடையிலான "ரவுண்ட்-16' சுற்று போட்டியிலும் நடுவர்களின் தவறு செய்தனர். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் கார்லஸ் டெவேஸ், தலையால் முட்டி அணியின் முதல் கோலை அடித்தார். இதனை "ஆப்-சைடு' என்று கூறி, மெக்சிகோ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே இத்தாலி நடுவர் ராபர்ட்டோ ரோசட்டி, சக நடுவர்களுடன் விவாதித்தார். பின் கோல் என்று அதிரடியாக அறிவித்தார். இது மெக்சிகோ அணியின் தோல்விக்கு வித்திட்டது. "ரீப்ளே' பார்த்த போது "ஆப்சைடு' என்பது தெளிவாக தெரிந்தது. டெவேஸ் அருகே எதிரணியின் தற்காப்பு வீரர்கள் யாரும் காணப்படவில்லை.

"பிபா' எதிர்ப்பு

"நாக்-அவுட்' சுற்று துவங்கி விட்ட நிலையில், நடுவர்களின் தவறான தீர்ப்பு முன்னணி அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள. இதனை தவிர்க்க, "வீடியோ' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர்(பிபா) செப் பிளாட்டர் கூறுகையில்,""சர்ச்சைக்குரிய கோல் பற்றி முடிவு செய்ய வீடியோ "ரீப்ளே' அல்லது "கோல் லைன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயலாது.

இதனை உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் அமல்படுத்த நிறைய செலவாகும். தவிர, போட்டியின் வேகத்தை குறைத்து விடும். எனவே, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வாய்ப்பு இல்லை,''என்றார்.

No comments:

Post a Comment