Showing posts with label ஸ்ரேயா. Show all posts
Showing posts with label ஸ்ரேயா. Show all posts

Wednesday, June 16, 2010

வாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது - ஸ்ரேயா

ஸ்ரேயா இப்போது சீனிலேயே இல்லை. சிக்கு புக்கு, ரவுத்திரம் என்று அவர் நடிக்கும் எல்லாப் படங்களும் அன்டர்புரொட‌க்சன் லெவலிலேயே உள்ளன. ஆனாலும் அவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை. ரவுத்திரம் படம் ட்ராப், தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனம், திருமண கிசுகிசு என அனைத்துக்கும் அலட்டாமல் பதில் வருகிறது இந்த கிளாமர் குயினிடமிருந்து.

தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்கள். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா? பெ‌ரிய படம், திறமையான இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் புலியில் ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொண்டேன். இதுபோல் பெ‌ரிய வாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது பற்றி யோசிப்பேன். ஆனால் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்.

ஏன் தமிழுக்கு மட்டும் பாரபட்சம்...?

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்தாலும் தெலுங்கை விட தமிழுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால்தான் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்றேன்.

சிக்கு புக்கு படத்தில் நீங்கள் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராமே?

இந்தப் படத்தின் கதை என்னையும், ஆர்யாவையும் சுற்றிதான் நடக்கும். நான்தான் படத்தின் ஹீரோயின். அம்‌ரிதா ராவின் தங்கை பி‌‌ரீத்தி இந்தப் படத்தில் கவுர வேடத்தில் நடிக்கிறார். இதை‌த்தான் சிலர் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கு ஜாலியான கேரக்டர். ரொம்பப் பிடித்து நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.