நாடகமே உலகம். நம்புறோம் சாமி. அதுக்காக காலம் போன காலத்தில நடிக்க வந்து தினமும் விளம்பரத்திலேயும் இடம் புடிக்கிறது பெரிய கலைதான்னு காதை கடிக்குது கோடம்பாக்க சந்து பொந்து சபை! வேறொன்றுமில்லை, பா.ர.பழனிச்சாமி படத்தில் பிரபுதேவா, ராஜுசுந்தரத்தின் அப்பா சுந்தரமும் நடிக்கிறார் என்பதற்குதான் இப்படியரு கமெண்ட். அந்த விளம்பரத்தில் இவரது முக எக்ஸ்பிரஷனை கண்டு பிடிப்பவர்களுக்கு நு�று தங்க காசுகள் கொடுப்பதாக ஒரு மெகா பரிசு போட்டியே அறிவிக்கலாம்!
இந்த லட்சணத்தில் ஆந்திர நீதிமன்றம் செம்மையாக குட்டு வைத்திருக்கிறது மாஸ்டருக்கு. தெலுங்கு சேனல் ஒன்றில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் நடுவராக இருப்பவர் பிரபுதேவாவின் அப்பாதான். நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற குழந்தைகளுக்கு ஆபாச உடை கொடுத்து ஆடச் சொல்வதுடன், அவர்களை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு நீ சிலுக்கு மாதிரி இருக்கே, ஜெயமாலினி இருக்கே என்றெல்லாம் கமென்ட் அடிக்கிறாராம் மாஸ்டர். பிஞ்சு மனசில் இது தவறான எண்ணங்களை உருவாக்கும் என்று கண்டித்திருக்கிற நீதிமன்றம் அந்த நிகழ்ச்சியையே நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.