Monday, August 16, 2010

அனோ டொமினி

அனொ டொமினி (இலத்தீன்: Anno Domini இடைபட்ட காலத்தில் இலத்தீன் மொழியில் இவ்வாறு பொருள்பட வழங்கி வந்தனர்.(Anno=Our-அனோ= நமது, Domini=God-டொமினி=கடவுள்), இதன் முழுப் பொருள் கொண்ட வாசகம் எம் கடவுளாகிய ஏசு பிறந்த காலத்தில் (Anno Domini Nostri Iesu (Jesu) Christi="In the Year of Our Lord Jesus Christ") என்ற இலத்தின் மொழி வாசகத்தின் சுருக்கமே அனோ டொமினி. ஆங்கிலத்தில் ADஎன சுருக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கம் கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி.அல்லது கிபி என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=BC) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. அல்லது கிமுஎனத் தமிழில் வழ்ங்கப்படுகிறது.

அனொ டொமினி முறை கிபி 525 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், கி.பி. 8ஆம் நூற்றாண்டிலேயே மேற்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


1 comment: