![]() |
த்ரிஷாவைப் போலவே இன்னமும் இளமையான தோற்றத்துடன் மாடர்ன் மங்கையாக வலம் வந்து கொண்டிருக்கும் உமாவை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கிறார்கள். நடிப்பெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று சட்டென பதில் சொல்லி கால்ஷீட் கேட்பவர்களை ஓட்டம் பிடிக்க வைத்து விடுவார். ஆனால் இப்போது கமல்ஹாசன் வீசிய வலையில் விழுந்து விட்டாராம் உமா. கமல்ஹாசன் - த்ரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில்தான் உமா நடிக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 90 சதவீதம் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், த்ரிஷாவுக்கு பாதுகாப்பாக வரும் உமாவுக்காக ஒரு சிறிய கேரக்டரை உருவாக்கியிருக்கும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அந்த கேரக்டரில் கண்டிப்பாக நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். கமல்ஹாசனும் விரும்பி கேட்டுக் கொண்டதால் உமா சம்மதம் தெரிவித்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள் |
Friday, July 9, 2010
திரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்
Subscribe to:
Post Comments (Atom)
Thalaivaa thalaippai maaththunga .... :-)
ReplyDelete