Wednesday, April 20, 2011

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் �படங்கள் இணைப்பு

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...


இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...


இப்படி ஆட்டு மந்தைகளைப் போல கொடூரமாக எடுக்கப்பட்ட வன்னி வாழ் மக்களின் படங்கள்

இப்படியான வயதான காலத்திலும் சிறிலங்காப் படையினரால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது போல நிறுத்தப்படுகிறார்கள்..


உளவியல் ரீதியாகச் சிதைத்தே மீதமிருப்பவர்களையும் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறார்கள் இந்த சிறீலங்காவின் நவீன ஜம தூதர்கள்...

அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து பாருங்கள்... முகங்கள் அப்படியே சுருங்கி விட்டன...


படங்களில் உள்ள அனைவருமே தங்களின் பாசத்துக்குரிய உறவுகள் யாரையாவது நிச்சயம் இழந்திருப்பார்கள்... எத்தனை நாள் உணவின்றி இருந்திருப்பார்கள்...

ஒரு தமிழனாக உயிர் வாழுவதற்காய் அவர்கள் படும் அவலத்தை பார்க்க இதை விட நேரிடைச் சாட்சியம் எங்கும் கிடையாது....


புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூவிக் கொண்டு திரியும் சிறீலங்கா அரசு இன்னமும் ஏன் இவர்களைச் சித்திரவதை செய்கின்றது.

இவர்களால் இனி ஆயுதம் ஏந்த முடியுமா? அப்போ எதற்காக கொலைக் குற்றவாளி போல நிற்க வைத்து இந்தக் கேவலமான படப் பிடிப்புக்கள்...

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் இவர்களிடம் அப்படி என்ன கேட்டார்கள்... தற்போதைக்கு இருக்க ஒரு இடமும் குறைந்தது இரண்டு வேளையாவது சாப்பாடும்....


புலிகளை முன்னின்று கொன்றொளித்த இந்தியாவுக்கும் இவர்களின் வேதனை தெரிவதில்லை... சர்வதேசத்துக்கும் புரிவதில்லை..

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சிங்களவனை இப்படியாக நிற்கவைத்து படம் பிடித்திடுமா சிறிலங்கா அரசு?

இவர்களுக்கு குறைந்தது மனிதத் தன்மை கூட இல்லையா?

சிறீலங்காவின் நவீன தண்டனைகளை நித்தமும் அனுபவித்து வரும் தமிழ் மக்களைப் பற்றிப் பேசுவதற்கு இலங்கையில் ஆட்கள் இல்லை... உண்மையும் கூட..

ஏனெனில் இவர்களுக்காகப் பேசியவர்கள், போராடியவர்களை அழித்தும் இரண்டரை வருடங்கள் ஆகி விட்டனவே... இனி யார் பேசப் போகிறார்கள்...

உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களையே இப்படிக் கொடூரமாக சிறுகச் சிறுக சித்திரவதை செய்து சாகடிக்கும் அரசு உள்ள நாடு சிறீலங்கா மட்டுமே...

புலிகளை அழித்து விட்டால் தமிழர்களின் உரிமையைக் கொடுத்து விடுவோம் என்று சொன்ன சிறிலங்கா அரசு மானம் மரியாதையோடு வாழ்ந்த தமிழ் மக்களை கள்ளன், காடையர்களை போல நிற்க வைத்துப் படம் பிடிக்கிறது...

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இத்தகைய கேவலமான செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

கொடூர கொலைக்குற்றம் செய்தவர்கள் போல இந்த அப்பாவி மக்களை நிறுத்தப்படும் கொடூரம் உலகில் உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக் கூடாது...

Wednesday, March 9, 2011

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஷார்ட்கர்ட் கீகள் (Shortcut keys)

கணணியை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.

CTRL+C (Copy): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

CTRL+X (Cut): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட. நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட. இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

DELETE (Delete): எதனையும் அழித்துவிட. இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும். தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட. இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.

F2 Key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.

CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.

CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்திய பின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட.

F3 Key: பைல் அல்லது போல்டரைத் தேட.

ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.

ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.

CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும். எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.

F10 Key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

Monday, March 7, 2011

மம்மி

மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

சொற்றோற்றம்

மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடலில் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்


பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.


கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது.


இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது.

இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

Friday, March 4, 2011

கம்பியூட்டர்களின் முப்பாட்டன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்! (பட இணைப்பு)

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன.

1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.

1949 மே மாதம் 6ம் திகதி இது முதற்தடவையாகப் பாவனைக்கு வந்தது. இன்றைய நவீன கம்பியூட்டர்கள் இவ்வாறான 30 மில்லியன் கட்டளைகளை நிறைவேற்றக்கூடியவை.

இருப்பினும் இன்றைய கம்பியூட்டர்களுக்கு மூல காரணியாக அமைந்த அன்றைய கணினி இயந்திரம் அந்த கால கட்டத்தின் புரட்சிகரமான கணிப்பொறியாகும். இன்றைய கம்பியூட்டர்களை விட அன்றைய இயந்திரங்கள் 50000 மடங்கு மெதுவானவை.

அவற்றின் நினைவுப் பெட்டகப் பகுதியை மட்டும் வைத்திருப்பதற்கு தனியான அறையொன்று தேவைப்பட்டது. அவை 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவையாகக் காணப்பட்டன.இருந்தாலும் அந்த கால கணிப்பொறி இயந்திரங்களை விட இவை 1500 மடங்கு வேகமானவை. பல வாரங்களுக்குத் தரவுகளைச் சேமித்து வைக்க்கூடியவை. அந்த கால கணினிகள் பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பாதுகாத்து வைக்கப்படடுள்ளன.

நவீன கம்பியூட்டர்களின் வழித்தோன்றல் இங்கிருந்து தான் ஆரம்பமாகின்றது. இவை இன்றைய கம்பியூட்டர்களின் முப்பாட்டன்கள் என்று நூதனசாலை அதிகாரயொருவர் வர்ணித்துள்ளார்.

அந்தகால கணிப்பொறியொன்றை வைத்திருக்க 215 சதுர அடி நிலப்பரப்புத் தேவைப்பட்டது. 3000 வேல்வுகளை அது கொண்டிருந்தது. ஆனால் இன்றை நவீன மடிக் கணினி யொன்று இலட்சக்கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது.

கம்பியூட்டர் தலைமுறையின் நினைவாக இது பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது.

புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!

பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.

இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும்.

பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன. இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை.

உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன.

இந்த டிக் ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

Wednesday, February 2, 2011

இணைப்பேன் என் தமிழ் சமுதாயத்தை... - முத்துக்குமார்அவனும் நானும் ஒரே இனம். என் சகோதர சகோதரிகள் கொல்லப்படும் போது நான் அழக் கூடாதென அச்சுறுத்துகிறது இந்தியாவின் இறையாண்மை. எம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கழுத்தறுபடும் போது வாடாதிருக்கிறது என் தேசம். இந்த அவலத்திற்கு காரணம் சீனாவின் பீரங்கிகளும், இந்தியா பாகிஸ்தானின் விமானங்கள் மட்டும் தானா? சர்வதேசத்தின் மௌனமும் தானே?
களைப்பேன் இந்த மௌனத்தை!
இணைப்பேன் என் தமிழ் சமுதாயத்தை... - முத்துக்குமார்

Wednesday, January 19, 2011

பிரபாகரன்! மகிழ்ச்சி செய்தி!

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

""சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... ""நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளி யே வருவார்' என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.