Tuesday, June 29, 2010

650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குள தடாகம் (படங்கள் இணைப்பு)
உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது
சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது.
சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட
3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே
கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங்
பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில்
அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள்
இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில்
அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என
அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Don't look down: A guest swims in the infinity pool of the Skypark that tops the Marina Bay Sands hotel towers - 55 stories over the city of Singapore yesterday

Don't look down: A guest swims in the infinity pool of the Skypark that tops the Marina Bay Sands hotel towers -

55 storeys over the city of Singapore yesterday

To infinity... and beyond! The pool stretches 150 metres, three times the length of an Olympic swimming pool

To infinity... and beyond! The pool stretches 150 metres, three times the length of an Olympic swimming pool

The view over the side: An artist's impression shows the Skypark that tops the Marina Bay Sands hotel towers, including the infinity pool

The view over the side: An artist's impression shows the Skypark that tops the Marina Bay Sands hotel towers,

including the infinity pool

The hotel, which has 2,560 rooms costing from £350 a night, was officially opened yesterday with a concert by

Diana Ross.

The Emirates Palace Hotel in Abu Dhabi, estimated to have cost £2billion when it opened in 2004, was previously

the world's most expensive hotel.

But with its indoor canal, opulent art, casino, outdoor plaza, convention centre, theatre, crystal pavilion and

museum shaped like a lotus flower, the Marina Bay Sands has taken its crown.

The infinity pool on the roof is in the 'SkyPark' which spans the three towers of the hotel. The platform itself is longer than the Eiffel tower laid down and is one of the largest of its kind in the world.

Infinity pools give the effect that the water extends to the horizon. In reality, the water spills over the edge into a

catchment below, and is then pumped back into the pool. The pools have two circulation systems. The first

functions like that of a regular pool, filtering and heating the water in the main pool. The second filters the

water in the catch basin and returns it to the upper pool.

The resort from across the bay. The three towers were based on a deck of cards, according to designer Moshe Safdie

The resort from across the bay. The three towers were based on a deck of cards, according to designer Moshe Safdie

A skydiver parachutes pass the Singapore Flyer and Marina Bay Sands casino resort as part of the venue's opening celebrations yesterday

A skydiver parachutes pass the Singapore Flyer and Marina Bay Sands casino resort as part of the venue's

opening celebrations yesterday

relay
gf

Extreme: Left, relay teams scale one of the towers in a race commemorating the opening yesterday. Right, a newly-wed couple enjoy a canal ride inside the resort's shopping centre

The Marina Sands resort was designed by architect Moshe Safdie who based it on a deck of cards.

Inside shoppers can ride along an indoor canal in Sampan boats styled on traditional Chinese vessels from the

17th century.

The owners have also commissioned five well-known artists to create works of art to 'integrate' with the buildings.

Among these is a 40m-long Antony Gormley sculpture made from 16,100 steel rods. The whole thing weighs

14.8 tons and it took 60 people to assemble it in the hotel.

Artist Chongbin Zheng created Rising Forest which is 83 three metre high pots with trees in them. The pots

were so big the artist had to build a customised kiln the size of a small building to make them in.

Last night, the world's most expensive hotel was given a launch party befitting it. Singing legend Diana

Ross performed for 2,500 VIPs in the resort's Grand Ballroom and pop singer Kelly Rowland headlined an outdoor

concert.

casion
art

Money-maker: Left, the entrance to the casino, which costs nearly £50 to get in and is attracting 25,000

visitors each day. Right, a man looks through a steel web art structure in one of the towers

Just enjoying the sun: Models pose in the pool for journalists at the grand opening yesterda

Just enjoying the sun: Models pose in the pool for journalists at the grand opening yesterdayMonday, June 21, 2010

யாழ்ப்பாணப் பொது நூலகம்

யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

வரலாறு

இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.


நூலகக் கட்டிடத்தின் இன்னொரு தோற்றம்

நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம்

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.


கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா அவர்கள் நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார்.


யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

பின்னணி

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன[4][5]. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது[4][5].

ராவணனால் குழப்பமடைந்த அமிதாப்பச்சன்


தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 18-ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ள படம் ராவணன்.

தமிழில் விக்ரம் ஏற்றுள்ள வீரா பாத்திரத்தை இந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஏற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய் தான் இந்தி, தமிழ் என இரண்டிலும் கதாநாயகி.

ராவணன் குறித்து ஒரு இணைய தளத்தில் அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த படம் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. இந்தப் படத்தை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக்களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம்மிக்கது.

அவர் தொடர்ந்து தனது மிகப்பெரும் ஆற்றலை நமது சினிமாவுக்கு வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவரது படைப்புகளால் நாம் தொடர்ந்து உற்சாகம் அடைவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இப்படி ராவணன் படத்தைப் பார்த்த பிரமிப்பில் அதைப் பாராட்டியுள்ள அமிதாப்பச்சன், படத்தின் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இதுபற்றி அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், ராவணன் (இந்திப்படம்) மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்யப்பட்டபோது படத்தின் முக்கியக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

அலெக்சாந்தர்

பேரரசன் அலெக்சாந்தர்
Alexander the Great
BattleofIssus333BC-mosaic-detail1.jpg
பாரசிக மன்னன் மூன்றாம் டாரியசுடன் அலெக்சாந்தர் போரிடும் காட்சி
ஆட்சிக்காலம் கிமு 336-323
பிறப்பு ஜூலை 20, கிமு 356
பிறப்பிடம் மசிடோன்
இறப்பு ஜூன் 11, கிமு 323 (அகவை 32)
இறந்த இடம் பாபிலோன்
முன்னிருந்தவர் இரண்டாம் பிலிப்
பின்வந்தவர் நான்காம் அலெக்சாந்தர்
துணைவர் பாக்ட்ரியாவின் ரொக்சானா
பேர்சியாவின் ஸ்டாடெய்ரா
வாரிசுகள் நான்காம் அலெக்சாந்தர்
தந்தை மசிடோனின் இரண்டாம் பிலிப்
தாய் ஒலிம்பியாஸ்

பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாந்தர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; ஜூலை 20, கிமு 356 - ஜூன் 11, கிமு 323), என்பவன் கிரேக்க[2][3] மன்னன் (மசிடோனின் பசீலியஸ்) (கிமு 336–323). மசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தர் எனவும் இவன் அழைக்கப்படுகிறான். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய காலக் கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பாற்றி ஆண்டான்.

அலெக்சாந்தர் அவனது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மசிடோனின் மன்னனாக முடிசூடினான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மசிடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடைத்து அவைகளை மசிடோனிய ஆட்சியில் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசை கைப்பற்றினான். இவன் அனத்தோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாக்ட்ரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான்.

இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவனிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். அவனும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தான்.

பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். இவனது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவன் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனியக் காலம் எனப்படுவதுடன், இது, கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.


தொடக்க காலம்

அலெக்சாந்தர் மசிடோனிய அரசனான இரண்டாம் பிலிப்புக்கும் அவனது நான்காவது மனைவியான ஒலிம்பியாஸ் என்பவளுக்கும் மகனாக, அந் நாட்டின் தலைநகரமான பெல்லாவில் பிறந்தான். இவன் தாய், தந்தை இரு வழியிலும் பலர் சிறந்த வீரர்களாக இருந்திருக்கின்றனர்.

மெசொப்பொத்தேமியா


பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிலவரைபடம்

மெசொப்பொதாமியா (Mesopotamia), தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா என்னும் சொல், மேற்கில் சிரியப் பலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன இரண்டு ஆற்றுச் சமவெளி முழுவதையும், சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய நாகரிகங்கள் சில தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது.

மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.

நகர்த் தேசங்களும், அதிகார மேன்மையும்

பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி ஆட்சி செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக் கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

 • மெசொப்பொத்தேமியா, சுமேரியர், அக்காத்தியர், பபிலோனியர் மற்றும் அசிரியர் போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
 • இப் பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் என நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறி வாழ்ந்துள்ளார்கள். இவர்களுள், உபெய்த் (Ubaid) மற்றும் சமரான் (Samarran) பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பொதுவாக சிக்கலாக சமூக அமைப்புகள் கி.மு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே ஜெரிக்கோ நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட சந்தடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது. சுமேரியருடைய மொழி, அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள் பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200 - 2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
 • கி.மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர்த் தேசங்கள் (city-states) காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. எரிது (Eridu), உருக் (Uruk), ஊர் (Ur), லகாஷ் (Lagash), கிர்சு (Girsu) போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "உருக்" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
 • கி.மு மூன்றாவது ஆயிரவாண்டு அளவில், மேற்சொன்ன நகர மையங்கள் மேன்மேலும் சிக்கல் தன்மை கொண்ட சமூகங்களாக உருவாகின. நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது மூலம், உணவு உற்பத்தி அதிகரித்து, மேலதிகமாக உணவு பெறப்பட்டது. பாரிய கட்டிட வேலைத் திட்டங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டன. அரசியல் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு சிக்கல் தன்மை கொண்டவைகளாயின.
 • கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவனால் மெசொபொதேமியாவில் "அகேத்" (Agade) அல்லது "அக்காத்" (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர் செமிட்டிக் இன மக்களாவர். இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ்வம்சம் கி.மு 2000 வரை தொடர்ந்தது.
 • இவ்வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், பல்வேறு நகர்த் தேசங்கள் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக்கொள்ளப் போடியிட்டன. அதே நேரம், ஸக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த "குட்டியர்" எனப்படுவோர் இப்பகுதியை ஆக்கிரமித்துச் சிலகாலம் ஆண்டனர்.

cuneiform script இல் சுமேரியக் கடவுள்களின் பெயர்கள், ca. கிமு 24ம் நூற்றாண்டு
 • இப்பகுதியின் ஆட்சி அதிகாரம் முடிவில் "ஊர்" எனப்பட்ட நகர்த் தேசத்திடம் சேர்ந்தது. "ஊர்" இன் மூன்றாவது அரச வம்சத்தின் (ஊர் III) ஆட்சியின் போது, கைத்தொழில்கள் மீது அரசின் கட்டுப்பாடு உச்சநிலையை அடைந்தது. "ஊர்-நம்மு", "ஷுல்கி", "ஹம்முராபி" என்பவர்கள் மூன்றாவது ஊர் அரசவம்சத்தின் புகழ் பெற்ற அரசர்களாவர்.
 • கி.மு 1600 ஆண்டளவில் "மித்தன்னி" (Mitanni) என்னும் கிழக்கு இந்தோ ஐரோப்பிய இன மக்கள், துருக்கிக்குத் தென்கிழக்கே உள்ள மெசொப்பொத்தேமியப் பகுதியில் குடியேறினர். கி.மு 1450 ல், நடுத்தர அளவுள்ள பேரரசொன்றை மெசொப்பொத்தேமியாவின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இவர்கள் நிறுவியதுடன், மற்றப்பகுதிகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து சிலகாலம் திறையும் பெற்று வந்தனர். இவர்களுடைய அதிகாரம் "காப்தி" (மினோயிக் கிறீட்) பரவியிருந்ததனால் இவர்கள் எகிப்தின் பாரோக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
 • இவர்கள் கி.மு 1300 இல், சின்ன ஆசியாவின் (Asia Minor) பெரும்பகுதியில் அதிகாரம் பெற்று, ஹத்துசாஷ் (இன்றைய துருக்கி) இலிருந்து ஆட்சி புரிந்து வந்த, மேற்கு இந்தோ-ஐரோப்பிய இனத்தவரான ஹத்திகளுக்குக் (Hatti) கீழ் சிற்றரசு நிலைக்குத் தாழ்ந்தனர்.

மொகெஞ்சதாரோ - அரப்பா

மொகெஞ்சதாரோ

மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்

கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் கிமு 2500 ஆண்டு பழமையான சிலை.
நாடு பாக்கிஸ்தானின் கொடி பாக்கிஸ்தான்
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iii
மேற்கோள் 138
பகுதி ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1980 (4வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

சிந்துவெளியில் மொஹெஞ்சதாரோ அமைவிடம்.

மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.

இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.


மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதி

இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.


இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

வரலாறு

மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.


அரப்பா


சிந்துவெளியில் ஹரப்பாவின் அமைவிடம்.

அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.

சேரர்

சேர மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சேரர்கள்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)
கடைச்சங்க காலச் சேரர்கள்
உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130
செங்குட்டுவன் கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180
குட்டுவன் கோதை கி.பி. 184-194
மாரிவெண்கோ காலம் தெரியவில்லை
சேரமான் வஞ்சன் காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறை காலம் தெரியவில்லை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை காலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள்
[[]] கி.பி.
edit

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள்

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.


சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:

 • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
 • பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
 • களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
 • செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
 • ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
 • செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
 • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
 • இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்


தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

உதியஞ்சேரலாதன் - கி.பி. 45-70

உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி. 71-129

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.


முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - கி.பி. 80-105

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்

பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

சேரன் செங்குட்டுவன் - கி.பி. 129-184

சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

காலம் பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

வரலாற்றுத் தகவல்கள்

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை

அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.


அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை - கி.பி. 123-148

செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.

இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு "கோ ஆதன்" என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.


ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 148-165

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.


தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி. 165-180

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

குட்டுவன் கோதை - கி.பி. 184-194

குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.

சேரமான் வஞ்சன்

சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

கொலோசியம், ரோம்


கொலொசியம் ரோம், இத்தாலி

கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

வரலாறு

கட்டுமானம்


கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.

கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.

ரோமர் வரலாற்றின் பிற்காலம்

217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

மத்தியகாலமும், மறுமலர்ச்சிக் காலமும்

847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், சென் பீட்டர் பசிலிக்கா (St. Peter's Basilica) மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர்.


கொலொசியம் ரோம், இத்தாலி

யூலியசு சீசர் VS ஏழாம் கிளியோபாட்ரா

யூலியசு சீசர் (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 - மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார். ரோம் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவராவார்.

யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். ஸுபுரா யென்ற உரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவன்ரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சான்ரிய நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.

யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். கொர்னெலியாவும், சீசரும் அன்புடன் இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். கான்சல் கொர்னெலியுஸ், சுல்லா என்ற பெயருடைய கயவனால், பதவியில் இருந்துத் துரத்தப்பட்டார். சுல்லா தனக்குப் பிடிக்காதவர்கள், செல்வாக்கு உள்ள குடும்பத்தில் திருமணம் செய்திருந்தால் அவர்கள் தன் மனைவியரை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டார். யூலியஸ் சீசர் தவிர மற்ற அனைவரும் அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். சீசர் தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து தலை மறைவானார்.

கடைசியில், சுல்லா சீசரின் தைரியத்தை மெச்சி, சீசரும்,கொர்னெலியாவும் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி.மு.78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.


சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.


ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.


ஏழாம் கிளியோபாட்ரா

ஏழாம் கிளியோபாட்ரா
எகிப்தின் அரசி
Cleopatra VII
ஆட்சிக்காலம் கிமு 51 –12 ஆகஸ்ட் கிமு 30
தொலமி XIII (51 BC–47 BC)
தொலமி XIV (கிமு 47 – கிமு 44 )
சீசரியன் (கிமு 44 –கிமு 30 )
பிறப்பு ஜனவரி கிமு 69
பிறப்பிடம் அலெக்சாந்திரியா
இறப்பு 12 ஆகஸ்ட்[மேற்கோள் தேவை] 30 BC
இறந்த இடம் அலெக்சாந்திரியா
முன்னிருந்தவர் தொலமி XII
பின்வந்தவர் இல்லை (ரோம மாகாணம்)
துணைவர் தொலமி XIII
ஜூலியஸ் சீசர்
மார்க் ஆண்டனி
அரச வம்சம் தொலமிய
தந்தை தொலமி XII
தாய் எகிப்தின் கிளியோபாட்ரா V
பிள்ளைகள் சீசரியன், அலெக்சாண்டர் ஹெலியோஸ், கிளியோபாட்ரா செலேன் II, தொலமி பிலடெல்பஸ்

ஏழாம் கிளியோபாட்ரா அல்லது கிளியோபாட்ரா VII பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான பன்னிரண்டாம் தொலமியுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார், பின்னர் அவரது சகோதரர்களும் கணவர்களுமான பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகியோருடனும் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார். இறுதியை எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார். எகிப்தின் பாரோவாக ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசருடன் மண உறவு வைத்திருந்தார். அதனால் எகிப்தின் ஆட்சியில் அவரது பிடியை இறுக்கமாக வைத்திருக்க முடிந்தது. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்டது. மார்க் ஆண்டனியுடனும் அதேவிதமான உறவு இருந்தது. இததகைய மண உறவுகளால் கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் இருந்தனர். இதில் ஒரு ஆண் பிள்ளை ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தது. தொலமி சீசர் என்னும் இவன் சீசரியன் என அழைக்கப்பட்டான். மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு ஒரு இரட்டைக் குழந்தைகளும், பின்னர் ஒரு மகனும் பிறந்தனர். இவர்கள் முறையே இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ், தொலமி பிலடெல்பஸ் என்பவர்களாவர். கிளியோபாட்ரா தனது சகோதரர்களுடன் கொண்டிருந்த மண உறவால் பிள்ளைகள் பிறக்கவில்லை.

ஏழாம் கிளியோபாட்ராவின் ஆட்சி, எகிப்தில் ஹெலெனிய ஆட்சியின் முடிவாகவும், ரோமர் ஆட்சியின் தொடக்கமாகவும் அமைந்தது.

சீனப் பெருஞ் சுவர்

சீனப் பெருஞ் சுவர்
The Great Wall*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
The Great Wall
நாடு Flag of the People's Republic of China.svg சீனா
வகை காலச்சாரம் சார்
ஒப்பளவு i, ii, iii, iv, vi
மேற்கோள் 438
பகுதி ஆசியா பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1987 (11வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)")என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும், மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்தூக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

வரலாறு


பெருஞ்சுவர் சின் வம்சம்

பெருஞ்சுவர் ஹான் வம்சம்

பெருஞ்சுவர் மிங் வம்சம்

முழுமையான சுவர்க் கட்டுமானத்தின் நிலப்படம்

கிமு 7 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221ல் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.

வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன:

 1. கிமு 208 (கின் வம்சம்)
 2. கிமு முதலாம் நூற்றாண்டு (ஹான் வம்சம்)
 3. 1138 - 1198 (பத்து வம்சங்களினதும் ஐந்து அரசுகளினதும் காலம்)
 4. 1368 (மிங் வம்சம்)

மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. 9 மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின.

முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததின் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது.

அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் "உலகின் அதி நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு.

குறிப்பிடத்தக்க பகுதிகள்

பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன், தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன.


ஜின்ஷான்லிங்கிலுள்ள சுவரின் ஒரு பகுதி
Greatwall-SA3.jpg

 • வடக்குக் கடவை அல்லது ஜூயோங்குவான் கடவை. சீனர்கள் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு இச் சுவரைப் பயன்படுத்திய காலத்தில், சுவரின் இப்பகுதியில் பல காவலர்கள் இருந்து தலைநகரான பெய்ஜிங்கைப் பாதுகாத்தனர். மலைப்பகுதியில் இருந்து எடுத்த கற்களாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட இச் சுவர்ப்பகுதி, 7.8 மீட்டர் (25.6 அடி) உயரமும், 5 மீட்டர் (16.4 அடி) அகலமும் கொண்டது.
 • மேற்குக் கடவை அல்லது ஜியாயுகுவான் கடவை. இக் கோட்டை, சீனப் பெருஞ் சுவரின் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
 • ஷான்ஹாய்குவான் கடவை. இக்கோட்டை பெருஞ்சுவரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 • மிகவும் சரிவான மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிங் காலச் சுவர்ப் பகுதி, மிகவும் கவர்ச்சியானது. இது 11 கிலோமீட்டர் (7 மைல்) நீளமும், 5 தொடக்கம் 8 மீட்டர்வரை (16 - 26 அடி) உயரமும் கொண்டது. அடிப்பகுதியில் 6 மீட்டர் (19.7 அடி) அகலத்தைக் கொண்ட இச் சுவர்ப்பகுதி உச்சியில் 5 மீட்டர் (16.4 அடி) அகலத்தைக் கொண்டுள்ளது. வாங்ஜிங்லூ என்பது ஜிங்ஷான்லிங்கின் 67 காவல் கோபுரங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 980 மீட்டர் (3,215 அடி) உயரத்தில் உள்ளது.
 • ஜின்ஷான்லிங்கின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முத்தியான்யு பெருஞ்சுவர் மலையொன்றைச் சுற்றி அமைந்துள்ளது. தென்கிழக்கிலிருந்து, வடமேற்காகச் செல்லும் இச் சுவர் 2.25 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமானது. இது மேற்கில் ஜுயோங்குவான் கடவையுடனும், கிழக்கில் குபெய்க்குவுடனும் இணைந்துள்ளது.

இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், "பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்" எனப்படுகிறது.

காவற் கோபுரங்கள்

பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள் குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டிடப்பொருள்கள்

செங்கற்கள் பயன்பாட்டுக்கு வர முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாக சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன் படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன.

தற்போதைய நிலைமை

பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்டுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது.nataraj.j

சிறப்பு மதிப்பீடு

இச் சுவர் சிலசமயம் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல.

1987ல் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது.


1938 ல், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல.

எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு.

"விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார்.

அனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார்.

எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு.