Friday, March 4, 2011

புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!

பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.

இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும்.

பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன. இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை.

உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன.

இந்த டிக் ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

No comments:

Post a Comment