2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்க ஷூவை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க ஷூவை வெல்வதற்கு 3 வீரர்களிடையே தற்போது கடும் போட்டி நிலவுகிறது. அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் வீரர் டேவிட் வில்லா 5 கோல்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அரை இறுதியில் ஸ்பெயின், ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வில்லா மற்றும் ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் கோல் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர்கள் அடிக்கும் கோல்களைப் பொறுத்துதான் தங்க ஷூவை தட்டிச்செல்வது யார் என்பது தெரியவரும். இதேபோல் உருகுவே வீரர் டீகோ போர்லான், நெதர்லாந்தின் வெஸ்லே ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் அரை இறுதியில் விளையாடுகின்றன. சிறப்பாக விளையாடி அதிக கோல்களை அடிக்கும் பட்சத்தில் இவர்களுக்கும் தங்க ஷூ கிடைக்க வாய்ப்புள்ளது. |
Monday, July 5, 2010
கோல்டன் ஷூ யாருக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment