Monday, July 12, 2010

களைகட்டிய நித்யானந்தா

களைகட்டிய நித்யானந்தா ஆசிரமம் - நடிகை உட்பட பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு
சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி வெளியானதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் கைதான நித்யானந்தாவுக்கு கோர்ட்டு வழங்கிய நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பிடதி ஆச்சிரமத்தில் தங்கலாம், மத பிரசங்கம் செய்யலாம், நகரை விட்டு வெளியே பிரசங்கம் செய்ய சென்றால் போலீசில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லலாம் என்று கோர்ட்டு அறிவித்தது.

இதனால் நித்யானந்தாவும் அவரது பக்தர்களும் உற்சாகம் அடைந்தனர். உடனடியாக அவரது பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

பிடதி ஆச்சிரமத்தின் அரங்கில் சொற்பொழிவு நடந்தது. மாலை 6 மணிக்கு நித்யானந்தா தனது உரையை தொடங்கினார். “சுதந்திரம்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

அவரது பேச்சை கேட்க ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர் உணர்ச்சி பூர்வமாக பேசியதும் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அவர் தனது சொற்பொழிவில் கூறியதாவது:-

எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயற்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.

நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும்.

நான் சிறையில் இருந்த போதும் என் ஆன்மா வெளியேதான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே நினைக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நித்யானந்தா 1 1/2மணி நேரம் பேசினார். 80 நாட்களுக்கு பிறகு நித்யானந்தா முதன் முதலில் பக்தர்கள் முன் பிரசங்கம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் ஆசிரமம் களை கட்டியது. பிரசங்கம் முடிந்ததும் நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சாமியார் நித்யானந்தா எந்தவிதமான சலனமும் இல்லாமல் வழக்கமான புன்னகையுடன் சொற்பொழிவை நிகழ்த்தினார். தொடர்ந்து முன்பு போல் வெளியூர்களிலும் பிரசங்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது சீடர்கள் செய்து வருகிறார்கள்.

மீண்டும் திரனன்னா திரனன்னா திரனா

2 comments:

  1. I THINK NITHYANADHA IS A GOOD PERSON, LETS OPEN DOOR LET AIR COME IN

    ReplyDelete
  2. yes..we need more videos.. or perhaps short (gilma) films..then that popular TV will start "inthiya tholaikaatchikalileye muthal murayaaga"..

    ReplyDelete