இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலக கிண்ண போட்டிக்கு முன்னதாக, அவர் ஏ.சி.மிலான் அணிக்காக 6 மாத காலம் விளையாடினார்.
கடந்த காலம் சீரி 'ஏ' போட்டியில் ஜெனோவா அணியுடன் ஏ.சி.மிலான் மோதியது. இந்த போட்டியின் போது,பெக்காமுக்கு கனுக்காலில் தசைநார் கிழிந்து 6 மாதகாலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை.ஆனால் அணியின் துணை பயிற்சியாளராக அவர் தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தார். இதற்கிடையே அவரது காயம் விரைவாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து 2012ம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண உமைப்பந்தாட்ட போட்டி தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது.
ஐரோப்பிய கிண்ண தகுதி சுற்று போட்டியில் எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி பல்கேரியாவுடனும் 7ஆம் திகதி சுவிட்சர்லாந்து அணியுடனும் இங்கிலாந்து மோதுகிறது. மேலும் பெக்காம் மீண்டும் இங்கிலாந்து அணியின் தலைவராகவும் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment