Friday, July 9, 2010

அஜீத்திடம் புதுக்குழப்பம்!



கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்ததுதான் பாரத நாடு என்பார் சுருளிராஜன். ஆனால் அஜீத் படத்தை பற்றி பேசுவதே ஒரு தனி கதையாக இருக்கிறது சக நடிகர்களுக்குள்!

அசல் படத்திற்கு பிறகு முறையாக கால்ஷீட் கொடுத்து நடித்திருந்தால் இந்நேரம் இரண்டு படம் வெளி வந்திருக்கும். ஆனால் ரேஸ்தான் எனது பாஸ் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு போய்விட்டார் அஜீத். போவதற்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்துவிட்டு போனவர் திரும்பி வரும் போது வேறொரு மூடோடு வர, மூட் அவுட் ஆனார் கவுதம்.

இடையில் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்ட அஜீத், கவுதம் படத்தை கை விட்டு விட்டார் என்றும் இல்லையில்லை, தள்ளிதான் வைத்திருக்கிறார் என்றும் தாறுமாறாக பேச்சு! சம்பந்தப்பட்ட யாருமே இது குறித்து பேசவில்லை என்றாலும், வெங்கட் பிரபுவின் படத்திற்கு டைட்டில் வரைக்கும் வைத்து அழகு பார்த்துவிட்டது மீடியா.

ஆனால் எல்லா நாடகத்திற்கும் ஒரே க்ளைமாக்ஸ் வைத்திருக்கும் அஜீத், வெங்கட் பிரபுவையும் கழற்றிவிட்டுவிட்டாராம். கடந்த சில நாட்களாக இந்த புராஜக்டில் புதுக்குழப்பம் என்கிறார்கள். வெங்கட் பிரபுவை விட ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வேறொரு டைரக்டரை தேர்வு செய்யலாமே என்ற எண்ணம் வந்திருக்கிறதாம் அஜீத்திற்கு.

மனம் ஒரு குரங்கு. அது மேலெல்லாம் சிரங்குன்னு சும்மாவா சொன்னாங்க...

No comments:

Post a Comment