Tuesday, May 25, 2010
பிகினி அணிய அனுமதித்தால் நடிப்பேன் -ஷெர்லின் சோப்ரா
டிவி நாடகங்களில் நடிக்க நான் தயார். ஆனால் பிகினி உடையில் வர அனுமதிக்க வேண்டும் என்று குண்டைப் போடுகிறார் ஷெர்லின் சோப்ரா.
ஷெர்லின் சோப்ராவை சாதாரண உடையில் பார்க்கவே முடியாது. அப்படி ஒரு கிளாமர் பிரியை. கவர்ச்சிகரமாக இருப்பதை மட்டும் விரும்புபவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் படு சமர்த்தாக காணப்பட்டார் ஷெர்லின். ஆனால் பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
ஆனால் பிக் பாஸுக்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கலர்ஸ் டிவிக்கு நன்றி சொல்கிறார் ஷெர்லின்.
இந்த மாதத்தில் மும்பை போலீஸ் படையினரின் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடவும், பாடவும் போகிறாராம் ஷெர்லின். அதைத் தொடர்ந்து ஒரு பெரிய டிவி சேனலுக்காக இசை நிகழ்ச்சியைக் கொடுக்கப் போகிறாராம்.
வெளியில்தான் கவர்ச்சி திலகமாக இருக்கிறார் ஷெர்லின். உள்ளுக்குள் அவர் ஒரு வெட்கப்படும் பெண்ணாம். கூச்ச சுபாம் நிறைய உள்ளதாம். உடலில் உள்ளதை வெளிக் காட்ட தயங்காத இவர், மனதில் உள்ளதை வெளிப்படுத்த ரொம்ப யோசிப்பாராம்.
இடையில் தெலுங்கில் ஏ பிலிம் பை அரவிந்த் என்ற படத்தில் நடித்த ஷெர்லின் தொடர்ந்து பிராந்திய மொழிப் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையாம்.
இதை விட முக்கியமானது ஷெர்லினுக்கு காதல், கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டாலே அலர்ஜியாகி விடுமாம். இப்போதைக்கு இரண்டுமே கிடையாது என்கிறார்.
தனது அடுத்த கனவு ஹாலிவுட் என்று கூறும் ஷெர்லின், எப்படியாவது ஹாலிவுட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதாக கூறுகிறார்.
கனவு நனவாகட்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment