Tuesday, May 25, 2010

வடிவேலுவும் விரைவில் கம்பி -சிங்கமுத்து



செய்யாத குற்றத்துக்காக என்னை சிறையில் தள்ளிய வடிவேலுவும் ஒரு நாள் கம்பி எண்ணுவார் என்றார் சிங்கமுத்து.

வடிவேலுவின் மேனேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்துவை போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு நாள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது வடிவேலு குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் சிங்கமுத்து.

அவர் கூறுகையில், "வடிவேலுவின் மேனேஜர் மானேஜர் கருப்பா, சிவப்பா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எந்த தப்பும் செய்யாத என்னை சதி செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். வடிவேலு பற்றி நான் சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன். அப்போது வடிவேலுவும் என்னைப்போல் கம்பி எண்ணுவார்.

சினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயற்சிக்கிறார். பிறரை அழிக்க பொய்யாக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் அவர். என் வீட்டு முன்னால் கூட வடிவேலு ஆட்கள் தினமும் தகராறு செய்கிறார்கள். அதை போலீசில் நான் சொல்லவில்லை. நடிகர் சங்கத்தில்தான் அவர் மேல் புகார் கொடுத்தேன். ஆனால் சங்கம் எதுவும் செய்யவில்லை.

வடிவேலு வறுமையால் வாடியபோது அவருக்குக் கை கொடுத்து உதவினேன். அவருக்கு காமெடி எழுதி கொடுத்தவர்கள் பலர் இப்போது அவருடன் இல்லை. அவருடைய இரண்டு மானேஜர்கள் இப்போது உயிருடன் இல்லை. வளர்ந்து விட்டதால் ஆணவமாக திரிகிறார். என்னை கைது செய்ய வைத்ததன் மூலம் வடிவேலுவைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

ஜெயிலுக்குள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். கொலைகாரர்களையும் சந்தித்தேன். கைதிகள் மத்தியில் தேவாரம், திருவாசகம், சொற்பொழிவு நடத்தினேன். கைதிகள் என்னிடம் பாசமாக பழகினார்கள் என்றார் சிங்கமுத்து.

No comments:

Post a Comment