Wednesday, May 26, 2010
மழை
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.
மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா
"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment