கமல் நடிக்க, உதய நிதி ஸ்டாலின் தயாரிக்க கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படத்துக்கு மன்மதன் அம்பு எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
கமல் - த்ரிஷா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு முதலில் யாவரும் கேளிர் எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சில தினங்களில் இந்தப் பெயர் மாற்றப்பட்டதாகவும், காருண்யம் என்ற பெயரை கமல் தேர்வு செய்ததாகவும் செய்தி வெளியானது. இத்தனைக்கும் கமலே, இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரோ இதுகுறித்து எந்தத் தகவலும் கூறவில்லை.
இதற்கிடையே, தற்போது மன்மத அம்பு என படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் பிஆர்ஓவும் கமலின் மீடியா மேனேஜருமான நிகிலைத் தொடர்பு கொண்டபோது, 'படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக கமல்தான் அறிவிக்க வேண்டும். இன்னும் சில தினங்களில் அவரே அறிவிப்பார். பொறுத்திருங்கள்' என்றார்.
No comments:
Post a Comment