காளஹஸ்தி கோயிலில் தனக்கு சால்வை போட முயன்ற தொண்டர்கள் இருவரை கன்னத்தில் அறைந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் நடிகர் பாலகிருஷ்ணா.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் மகன்.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவராகவும் திகழ்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 'சிம்மா' படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்த வெற்றியையடுத்து, பாலகிருஷ்ணா கோயில் கோயிலாகப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக நேற்று காளஹஸ்தி கோயிலுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணா. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் தெலுங்கு தேசம் கட்சியினர்.
அவர் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது, ஒரு தொண்டர் ஆர்வம் மிகுதியில் அவருக்கு சால்வை அணிவிக்க முயல, அவரது கன்னத்தில் பளாரென்று அறை விட்டார் பாலகிருஷ்ணா. இதில் அதிர்ச்சியடைந்துவிட்டனர் தொண்டர்கள்.
பின்னர் கோயிலுக்குள் நுழைந்த பாலகிருஷ்ணாவுக்கு மீண்டும் சால்வை அணிவிக்க முயன்றார் வேறொரு தொண்டர். அவருக்கும் இதே போன்று பளார் பரிசு கிடைக்க, தொடர்ந்து அவரை விட்டு தள்ளியே நின்றனர் தொண்டர்கள்.
No comments:
Post a Comment