Friday, May 14, 2010

நான் ‘தம்’ அடிப்பதில்லை – ஆசின்

நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.

தசாவதாரம் படத்துக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் ஆசின். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக காவல்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் பெரும் புகழ் பெறலாம் என்ற கனவு, சல்மான் கானின் லண்டன் ட்ரீம்ஸுடன் புஸ்வானமாகிப் போனதால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்பி விட்டார் ஆசின் என்கிறார்கள்.

மீண்டும் தமிழுக்குத் திரும்பி வருவது குறித்து ஆசின் அளித்துள்ள பேட்டியில், நான் முதலில் தமிழை விட்டு போவதாக கூறவே இல்லை. எனவே திரும்பி வந்துள்ளேன் என்று கூற முடியாது. நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடிப்பேன் என்றுதான் கூறியிருந்தேன்.

எந்த ஒரு தனிப்பட்ட மொழி படங்களுக்கும் நான் சொந்தக்காரி அல்ல. எல்லா மொழிப் படங்களிலும் நான் நடிப்பேன்.

தமிழில் கஜினி மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு எனக்கு நிறையப் படங்கள் வந்தன. ஆனால் நல்ல படங்களாக பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடித்தேன்.

போக்கிரி, தசாவதாரம் படங்களுக்கு முன்பு என்னைத் தேடி வந்த பல படங்களை நான் நிராகரித்துள்ளேன் – கதை பிடிக்காததால் என்றார் ஆசின்.

மற்றவர்களைப் போல பார்ட்டிகளுக்குப் போவதில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்விக்கு, நான் அதிகம் பார்ட்டிகளுக்குப் போவதில்லை. நண்பர்களுடன் வீட்டிலேயே பார்ட்டி வைப்பதுதான் பிடிக்கும். நான் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. எனவே கிளப்களுக்குப் போய் பார்ட்டியைக் கொண்டாடுவதற்கான அவசியம் இல்லை.

இருப்பினும் நண்பர்கள் அல்லது திரைத்துறையினர் தொடர்பான பார்ட்டி என்றால் கலந்து கொள்வேன் என்றார் ஆசின்.

சரி இந்திய கேப்டன் டோணி உங்கள் வீட்டிற்கு வந்தாராமே என்ற கேள்விக்கு அது குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஏன் நட்பை களங்கமாக பார்க்கிறார்கள். நானும், டோணியும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்தோம். அதில் ஏற்பட்டதுதான் இந்த நட்பு, அவ்வளவுதான் என்றார் ஆசின்.

பின்னர் கூலாகிய ஆசின், அடுத்து ஜான் ஆப்ரகாமுடன் ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளேன். இது தெலுங்கில் நான் நடித்த கர்சனா படத்தின் ரீமேக்தான். பின்னர் தெலுங்கு படமான ரெடியின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளேன் என்றார் ஆசின்.

கர்சனா, தமிழில் வெளியான காக்க காக்க படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment