Thursday, May 27, 2010

ஸ்ரீதேவியின் மகளை இயக்கும் சசிகுமார்



சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.

இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார். அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி, தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம். கூடவே, "உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உங்களுடன் ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்" என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் சசிகுமார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான், நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார்.

ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.

No comments:

Post a Comment