Saturday, May 29, 2010

காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!



சார்.. பார்க்க அம்சமா இருக்கீங்க. பேசாம நீங்களே ஹீரோவா கலக்கலாம்... எதுக்கு மத்தவங்ககிட்ட கால்ஷீட்டுக்கு நிக்கணும்" என்றெல்லாம் பார்ப்பவர்கள் உசுப்பேத்த, உள்ளுக்குள் ஹீரோ ஆசை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது உதயநிதி ஸ்டாலினுக்கு.

இதனை அறிந்த குடும்பத்தினரும் அவரை உற்சாகப்படுத்த, நிறைய கதைகள் கேட்டார். கே எஸ் ரவிக்குமார் கூட ஆக்ஷன் - காமெடி கலந்த கதை ஒன்றை உதயநிதிக்கு சொன்னார். முருகதாஸ், தரணி என பெரிய இயக்குநர்கள் பெரிய பெரிய பட்ஜெட் படங்களுக்கான கதைகளோடு அவரை இம்ப்ரஸ் செய்ய முயல... 'கொஞ்சம் இருங்க.. அப்புறம் பார்த்துக்கலாம்' என்று கூறிவிட்டார்.

கடைசியில் ராஜேஷ் எம் சொன்ன ஒரு கதையை கப்பென்று பிடித்துக் கொண்டார் உதயநிதி. இது பக்கா காமெடி கதையாம். இதுதான் இப்போதைக்கு நமக்கு சரியானது என முடிவு களமிறங்கப் போகிறாராம்.

இந்த ராஜேஷ் வேரு யாருமல்ல... சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கியவர். இப்போது ஆர்யா - நயன்தாரா நடிக்கும் பாஸ் என்கிற பாஸகரன் படத்தை இயக்குகிறார்.

அந்தப் படம் முடிந்த கையோடு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குவாராம்!

No comments:

Post a Comment