சென்னை: தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலை உருவாக்கிய ஏஆர் ரஹ்மானோ, படமாக்கிய நானோ அதற்காக ஊதியம் எதுவும் பெறவில்லை, என்றார்.
இதுகுறித்து கவுதம் மேனன் கூறியது:
இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாதத்தில் இசை அமைத்துக் கொடுத்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். ஆனால் இதில் ஹெலிகாப்டர் மூலம் 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுக்க அனுமதி பெறுவதில் சிறிது தாமதம் ஆனது. மொத்தத்தில் 3 மாதங்களில் படமாக்கி முடித்தோம்.
இந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானோ, நானோ தனிப்பட்ட முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. தயாரிப்பு செலவு மட்டும் ஆனது. 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுப்பதற்கு மட்டும் ரூ.9 லட்சம் செலவானது.
முதலில் இந்த பாடலை இயக்குவதற்கு பயத்தோடுதான் வேலை செய்தேன். இந்த பாடலில் இசையை காட்சிகள் மறைத்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இது 5 நிமிட பாடல், ஒரு மணி நேரம் இருந்தால் கூட அதற்குள் தமிழை அடக்கிவிட முடியாது. இருந்தாலும் 5 நிமிடத்தில் எவ்வளவு முடியுமோ அதை செய்திருக்கிறோம்.
முதல்வர் இந்த பாடலைப் பார்த்துவிட்டு தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி..." என்றார்.
No comments:
Post a Comment