சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து ஒரு புதிய படத்தை உருவாக்கும்  முயற்சியில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.
ஒன்றுக்கும் மேற்பட்ட  ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள்தான் இனி கோலிவுட்டில் ஜெயிக்கும் என  நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், அதற்கு  செயல்வடிவம் தரும் வகையில், தனது அடுத்த படத்தை சூர்யா மற்றும் அவரது தம்பி  கார்த்தியை இணைத்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சன்.
வழக்கம்போல  வாங்கி விற்கும் படமாக இல்லாமல், எந்திரனுக்கு அடுத்து சொந்தமாக சன்  தயாரிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.
இயக்குநர், ஹீரோயின்  உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரைவில் அறிவிக்கவிருக்கின்றனர்.
சூர்யா  இப்போது ரத்த சரித்திரம், ஏழாம் அறிவு படங்களிலும், கார்த்தி நான் மகான்  அல்ல உள்ளிட்ட 3 படங்களிலும் நடிக்கிறார்கள். இந்தப் படங்கள் படங்கள்  முடியும் வரை காத்திருக்காமல் இடையிலேயே படப்பிடிப்புத் துவங்கும் எனத்  தெரிகிறது.
No comments:
Post a Comment