Wednesday, June 2, 2010

படமாகிறது சானியா கல்யாணா கலாட்டா

பெரும் சர்ச்சைகளை உள்ளடக்கிய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் திருமண கலாட்டா திரைப்படமாகிறது. ஆனால் இதற்கு சானியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பிடி கார்க் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜெய்பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு ஹைதராபாத் தமாத் எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் பூஜை நடந்தது.

சானியா கேரக்டரில் டிவி நடிகையான தேபினா பானர்ஜி நடிக்கிறாராம். இவர் தவிர அமர் உபாத்யாய், அலி மெர்ச்சன்ட் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

சானியா, சோயப் மாலிக் திருணத்தையொட்டி நடந்த சர்ச்சைகள்தான் படத்தின் மையக் கருவாம். மேலும், சோரப் மிர்ஸாவுடனானசானியாவின் திருமண நிச்சயதார்த்தம் முறிந்ததற்கான காரணத்தையும் இப்படம் அலசவுள்ளதாம்.

இந்தப் படம் சானியாவை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் படம் குறித்து தன்னிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முன்பே தெரிவிக்கவில்லை, அனுமதி பெறவில்லை என்று சானியா கூறியுள்ளார்.

இதுகுறித்து சானியா கூறுகையில், செய்தித்தாள்களில் படித்துதான் இதுகுறித்து தெரிந்து கொண்டேன். எனது திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமாப் படம் எடுப்பது தேவையற்றது, பொருத்தமற்றது.

இது தனது கற்பனைப் படம் என்பதை சம்பந்தப்பட்ட இயக்குநர் விளக்குவார் என நம்புகிறேன். என்னிடம் இதுகுறித்து எதுவும் கேட்கப்படாதது கோபத்தை ஏற்படுத்துகிறது. உண்மையான சானியா மிர்ஸா குறித்து ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த இயக்குநர் தனது படத்தை இயக்குவார் என்றால் அது பெரும் கேலிக்கூத்தாகவே இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment