தெரிந்தோ தெரியாமலோ தமிழின் முன்னணி நடிகையாகிவிட்டார் தமன்னா. இவர் நடித்து வெளிவந்த பையா வெற்றி பெற்றது. சுறா ஊத்திக் கொண்டது. ஆனாலும் இவரது மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்கு இவரது கால்ஷீட் ஃபுல்லாகிவிட்டது. இவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து கால்ஷீட் கேட்டாலும் இப்போதைக்கு இல்லை என்று கையை விரித்துவிடுகிறாராம் தமன்னா. நிலைமை இப்படி இருக்க, தயாநிதி அழகிரி தயாரிப்பில் லிங்குசாமி சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னாதான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் சிம்பு. ம்… ஆசை யாரைத்தான் விட்டுச்சு…?
simpu means small "THADI"(not THAADI)
ReplyDelete