Wednesday, June 2, 2010

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு

Fédération Internationale de Football Association

FIFA.svg

Motto விளையாட்டுக்காக. உலகுக்காக. (For the Game. For the World}
தோற்றுவிக்கப்பட்ட நாள் மே 21, 1904
வகை விளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமை அலுவலகம் சூரிச், சுவிட்சர்லாந்து
அங்கத்துவம் 208 தேசியக் கழகங்கள்
அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,[1]
தலைவர் Sepp Blatter
இணையத்தளம் www.fifa.com

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டி" ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 208 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.

No comments:

Post a Comment