1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை (ஜூல்ஸ் ரிமெட் கோப்பை) பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. எனவே 1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்ஸானிகா' வடிவமைத்த (அருகே உள்ள) கோப்பை தேர்ந்தெடுக்கப்பட்டது.
இது 36 செ.மீ. உயரமும், 4,970 கிராம் எடையும் கொண்டது. முழுவதும் 18 கேரட் தங்கத்தாலேயே செய்யப்பட்டது. இதன் அடிப்பாகம் இரண்டடுக்கு 'மாலச்சைட்' (Malachite) என்ற பொருளால் செய்யப்பட்டது. இப்பாகத்தில் 17 சிறு பட்டயங்கள் பொருத்த இடமுள்ளது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும்.
இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும்.
வெற்றியாளர்கள்
வருடம் | இடம் | வெற்றி பெற்ற நாடு | இரண்டாவது இடம் |
1930 | உருகுவே | உருகுவே | அர்ஜெண்டினா |
1934 | இத்தாலி | இத்தாலி | செக்கோஸ்லோவேகியா |
1938 | பிரான்ஸ் | இத்தாலி | ஹங்கேரி |
2ம் உலகப்போர் | |||
1950 | பிரேசில் | உருகுவே | பிரேசில் |
1954 | ஸ்விட்சர்லாந்து | மே. ஜெர்மனி | ஹங்கேரி |
1958 | ஸ்வீடன் | பிரேசில் | ஸ்வீடன் |
1962 | சிலி | பிரேசில் | செக்கோஸ்லோவேகியா |
1966 | இங்கிலாந்து | இங்கிலாந்து | ஜெர்மனி |
1970 | மெக்ஸிகோ | பிரேசில் | இத்தாலி |
1974 | மே. ஜெர்மனி | மே. ஜெர்மனி | நெதர்லாந்து |
1978 | அர்ஜெண்டினா | அர்ஜெண்டினா | நெதர்லாந்து |
1982 | ஸ்பெயின் | இத்தாலி | ஜெர்மனி |
1986 | மெக்ஸிகோ | அர்ஜெண்டினா | மே. ஜெர்மனி |
1990 | இத்தாலி | மே. ஜெர்மனி | அர்ஜெண்டினா |
1994 | USA | பிரேசில் | இத்தாலி |
1998 | பிரான்ஸ் | பிரான்ஸ் | பிரேசில் |
2002 | Korea / Japan | பிரேசில் | ஜெர்மனி |
2006 | ஜெர்மனி | இத்தாலி | பிரான்ஸ் |
No comments:
Post a Comment