இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், சிவ பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.
இராமாயணத்தில் இராவணன்
இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்று, இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய நினைத்தான். இவன் தன் மனைவியாக மண்டோதரியை அடைந்தான் மண்டோதரி கற்பில் சிறந்த பெண்ணாக விளங்கினால் இவளை பத்தினி [கற்ப்புக்கரசி] என்று போற்றினர்., இவனது அந்தப்புரத்தில் பல பெண்கள இருந்தார்கள் வேதவதி, ரம்பா ஆகியோர் இவர்களில் சிலர் .
குடும்பம்
இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன் கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்.
வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
இராவணனின் திராவிட மீளுருவாக்கம்
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே இராமாயணக் காப்பியக் கதையில் பொருந்தும்.மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது .
புசுபக விமானம்
புசுபக விமானம் என்பது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.. இதைக் குபேரனுக்கு பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்த்து, ராவணன் இதை அபகரித்தான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, ராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment