Friday, June 4, 2010

எவரெசுட்டு மலை

எவரெசுட்டு சிகரம்

எவரெஸ்ட்
Everest kalapatthar crop.jpg
உயரம் 8,848 மீட்டர்கள் (29,028 அடி)
அமைவிடம் கூம்பு, இமயமலை
தொடர் இமயமலை
சிறப்பு 8,848மீ உயரத்தில் முதன்மை
ஆள்கூறுகள் 27°59′N, 86°56′E
முதல் ஏற்றம் 1953, எட்மண்ட் ஹில்லரி + டென்சிங்கு நோர்கே
சுலப வழி தென் காலம்

எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்) உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணிப் உலகம் பெருமைப்பட்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்[மேற்கோள் தேவை]. எவரெசுட்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து சாகர்மாதா என்றும்), திபேத்திய மொழியில் கோமோலுங்குமா (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கபடுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர். இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி இமயமலை கட்டுரையைப் பார்க்கவும்.

உயர அளவீடும் பெயர் சூட்டும்

இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh) என்பார் சூட்டினார்.


எவரெசுட்டு மலை

No comments:

Post a Comment