اسلامی جمہوریۂ پاکستان இசுலாமி சமுரிய-பாகிஸ்தான் பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
குறிக்கோள் இமான், இட்டெட், தசிம் (நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்) | ||||||
நாட்டுப்பண் குவாமி தரனா (நாட்டு வணக்கம்) | ||||||
தலைநகரம் | இசுலமாபாத் | |||||
பெரிய நகரம் | கராச்சி | |||||
ஆட்சி மொழி(கள்) | உருது, ஆங்கிலம் | |||||
அரசு | இசுலாமிய கூட்டாட்சி குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஆசிஃப் அலி சர்தாரி | ||||
- | பிரதமர் | யூசஃப் ரசா கிலானி | ||||
சுதந்திரம் | ஐக்கிய இராச்சியத்திடமிருந்து | |||||
- | பிரகடணம் | ஆகஸ்டு 14, 1947 | ||||
- | குடியரசு | மார்ச் 23, 1956 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 880,254 கிமீ² (34வது) 339,868 சது. மை | ||||
- | நீர் (%) | 3.1 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2006 மதிப்பீடு | 163,985,373 [3] (6வது) | ||||
மொ.தே.உ (கொஆச (ppp)) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $404.6 பில்லியன் (26வது) | ||||
- | நபர்வரி | $2,628 (128வது) | ||||
ம.வ.சு (2003) | 0.527 (மத்திம) (135வது) | |||||
நாணயம் | பாகிஸ்தான் ரூபாய் (Rs.) (PKR ) | |||||
நேர வலயம் | PST (ஒ.ச.நே.+5:00) | |||||
- | கோடை (ப.சே.நே.) | பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [4] (UTC+6) | ||||
இணைய குறி | .pk | |||||
தொலைபேசி | +92 |
பாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது ஒரு இசுலாமிய குடியரசு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.
வரலாறு
1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கித்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கித்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.
புவியியல்
பாக்கித்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கனித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கித்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மக்கள்
மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இசுலாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இசுலாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.
நிர்வாகப்பிரிவுகள்
பாக்கித்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
மாகாணங்கள்:
- பலூச்சிசுதான்
- வடமேற்கு எல்லை மாகாணம் (NWFP)
- பஞ்சாப்
- சிந்த்
பிரதேசங்கள்:
- இசுலாமாபாத் தலைநகரப்பகுதி
- நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:
- ஆசாத் காஷ்மீரம்
- வடக்கு நிலங்கள்
அரசியல்
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
பொருளாதாரம்
பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனித்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
No comments:
Post a Comment