இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.
உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவா பெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது.
இமயமலையின் அண்மை பகுதிகளேயே தெற்கு ஆசியாவின் தொன்மையான சமயங்களான இந்து மதம், புத்த மதம் உருவாகி வளர்ச்சியடைந்தது..
இமயமலைத் தொடர் அமைந்துள்ள நாடுகள்
இமயமலைத் தொடர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,இந்தியா. சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக அமைந்துள்ளது.
இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகள்
இமயமலையின் பெரும்பாலான பகுதிகள பனிமலையால் சூழப்பட்டுள்ளன. இந்த பனிமலைகளிலிருந்து பல மிகப்பெரிய ஆறுகள் உருவாகுகிற்து. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.
இம்மலைத்தொடர் எவ்வாறு எப்பொழுது உருவாகியது
வரலாற்றில் இமயமலையின் பங்கு
இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தின் மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்தில்ருந்து பிரிக்கின்றது. உதாரண்மாக செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.
ஆர்வமுட்டக்கூடிய தகவல்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே
ReplyDelete///ஆர்வமுட்டக்கூடிய தகவல்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே ///
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..