Monday, June 7, 2010

அதிபர் மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப்பு



தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா.

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார் ஸூமா. அவருடன் 2வது மனைவியான 35 வயதான டுலியும் உடன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில்தான் டுலியின் கர்ப்பம் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.

டுலிக்கு பாடிகார்டாக இருந்தவர் பின்டா தோமோ. இவர் மூலம்தான் டுலி கர்ப்பமடைந்துள்ளார் என்பதுதான் அந்த சர்ச்சை. இதனால் ஸூமா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கும், தனக்கும் சங்கடத்தை ஏற்படுத்த நடக்கும் சதி என்று அவர் கூறியுள்ளார்.

ஸூமா மூலம் டுலிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஸூமாவுக்கு தனது மூன்று மனைவியர் மூலம் 20 குழந்தைகள் உள்ளனர். தற்போது டுலிக்குப் பிறக்கப் போவது ஸூமாவின் 21வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

2-3 மோதல்: தவிக்கும் முதல் மனைவி!

இதற்கிடையே, ஸூமாவின் மூன்று மனைவியருக்கும் இடையே கடும் சண்டை மூண்டிருப்பதாகவும் ஒரு செய்திவெளியாகியுள்ளது. அதாவது, ஸூமாவுடன் வெளிநாடு செல்வது யார் என்பதில்தான் இந்த சண்டை மூண்டுள்ளதாம்.

இதில் மூன்றாவதாக ஸூமா கட்டிக்கொண் மடிபாவுக்கு, முதல் மனைவியின் ஆதரவு உள்ளதாம். டுலிக்கு எதிராக இருவரும் திரண்டுள்ளனராம்.

இதுகுறித்து ஸூமா குடும்ப உறுப்பினர் டிரிப்யூனுக்கு அளித்த பேட்டியில், யார் பெரியவர் என்ற சண்டை 2வது மற்றும் 3வது மனைவிகளுக்கு இடையே வலுத்துள்ளது. இதில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார் முதல் மனைவியான குமாலோ.

மடிபாவை விட டுலிதான் மிகவும் பிடிவாதக்காரியாக இருக்கிறார். தானே ஸூமாவுக்கு எல்லாம் என்ற நினைப்புடன் இருக்கிறார். குமாலோவை அவர் மதிப்பதே இல்லை. மடிபாவையும் அவர் கண்டுகொள்வதில்லை.

டுலியால் குடும்பத்தில் தினசரி பிரச்சினை உருவாகி வருகிறது. அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றார்.

சமீபத்தில், இங்கிலாந்துக்கு ஸூமா சென்றிருந்தபோது, அவருடன் மூன்றாவது மனைவியான மடிபாவையும் அழைத்துச் சென்றிருந்தார்.இதனால் டுலி கடுப்பாகி விட்டாராம். மூத்தவள் நான் இருக்கும்போது எப்படி நேற்று வந்த மடிபாவை அழைத்துச் செல்லலாம் என்று ஸூமாவிடம் சண்டை போட்டாராம்.

ஆடு கொடுத்து மன்னிப்பு கேட்ட அண்ணன்கள்

தற்போது டுலிக்கும், பாடிகார்டுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஸூமா கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். இந்த நிலையில், டுலியின் சகோதரர்கள், ஸூமாவை சந்தித்து ஒரு ஆட்டைக் கொடுத்துள்ளனர். ஏதாவது தவறு செய்தால், ஆடு கொடுத்து மன்னிப்பு கேட்பது ஆப்பிரிக்க சம்பிரதாயமாம். தங்களது தங்கையின் தவறுக்கு மன்னிப்பு கேட்க ஆடு கொடுத்தார்களா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை.

1 comment: