தானுந்து அல்லது கார்(Car) (automobile) என்பது தானே இழுத்துச் செல்லும் போக்குவரத்து வண்டியாகும். ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் குதிரைகளும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ கி.பி. 1890 ஆண்டு வாக்கில் எந்த விலங்கும் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டு பிடித்தனர். 1900 ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
தானுந்துகளின் வரலாறு
இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெரு வளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்) பெட்ரோல் இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும் ஓட்டுனர் துணையில்லாமலும், என்று பற்பல கோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன. ஆனால் முதலில் எப்படித் தொடங்கி எப்படி வளர்ச்சியடைந்தது என்று பார்க்கலாம்.
1770 ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை பிரான்சு (‘விரான்சு) நாட்டு காப்டன் நிக்கொலாசு சோசப்பு க்யூனொ (Nicolas Joseph Cugnot) என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு கட்டைவண்டியிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்க்கூடியதாகவும், 10-15 மனித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது. இதனை படத்தில் காணலாம்.
பழைய தானுந்துகள்
இந்துஸ்தான் அம்பாசடர்
இந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador) என்பது இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. 1957இல் இத்தானுந்து உற்பத்தி செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்திலானது. நான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது.
மாருதி சுசூக்கி
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் | |
வகை | பொது (BSE MARUTI, NSE MARUTI) |
---|---|
துவக்கம் | 1981[1] |
தலைமையகம் | குர்காவுன், அரியானா, இந்தியா |
முக்கியமான நபர்கள் | ஷின்சோ நாக்கனிஷி, தலைமை செயற்குழு அதிகாரி ஜகதீஷ் கத்தர், தலைமை நிருவாகி |
தொழில்துறை | தானுந்து |
விற்பனை பொருள் | தானுந்துகள் |
வருவாய் | ▲$2.5 பில்லியன் (2005) |
ஊழியர்கள் | 6,903[2] |
பிடிப்புகம்பனி | சுசூக்கி |
அடைமொழி | Count on us. |
வலைத்தளம் | www.marutisuzuki.com |
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.
டாட்டா நேனோடாட்டா நேனோ அல்லது டாட்டா நானோ (Tata Nano) என்பது இந்தியாவின் டாட்டா மோட்டார்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. இது சனவரி 10, 2008 இல் புது டெல்லியில் நடந்த தானுந்து காட்சியின் போது அறிமுகப்படுத்தப் பட்டது. மக்கள் தானுந்து (People's Car) என்றழைக்கப்படும் இவ்வண்டி தற்போது உலகில் உள்ளவற்றில் எல்லாம் மலிவானது. இதனுடைய விலை (வரிகள், போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து) ரூபாய் ஒரு இலட்சம் ஆகும். இதனால் இவ்வண்டி லட்ச ரூபாய் கார் எனவும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment