
விலை படத்தில் விலைமாது பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் படுக்கையறைக் காட்சியில் நடித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்கிறார் நடிகை உதயதாரா.
தீ நகர், கண்ணுக்குள்ளே, மலையன், பயம் அறியான் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், உதயதாரா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர்.
விலை என்ற படத்தில் விலைமாது பாத்திரத்தில் நடிக்கிறார். விபசார விடுதியில் சிக்கிய அழகிகளை பற்றிய கதை இது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக, முக்கிய வேடத்தில் சரவணன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், கிளுகிளுப்பான படுக்கை அறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதில் உதயதாரா படு கவர்ச்சியாக நடித்து இருப்பதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.
இதுபற்றி உதயதாரா கூறுகையில், விலை, வெறும் சிவப்பு விளக்கு பெண்களை பற்றிய கதையல்ல. பெண்களுக்கான விழிப்புணர்வு கதை. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படத்தில், என் கதாபாத்திரம் அனுதாபத்துக்குரியது. கிராமத்தில் இருந்து வேலை கொடுப்பதாக சென்னைக்கு அழைத்து வந்து பெண்களை விபசார விடுதியில் விற்கும் கும்பலிடம், நானும் மாட்டிக் கொள்கிறேன்.
விபசார விடுதியில் சிக்கி கஷ்டப்படும் பெண்களில் நானும் ஒருத்தி. அங்கிருந்து எப்படி நான் தப்பிக்கிறேன்? என்பதுதான் கதை. கதையிலும் சரி, படத்திலும் சரி, ஆபாசமாகவோ தவறாகவோ எதுவும் இல்லை. படத்தில் காதல் காடசிகள் கூட இல்லை.
என் சம்பந்தப்பட்ட காட்சிகளில், படுக்கை அறை சமாசாரங்கள் இல்லை. அப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்கவில்லை. என்னைத் தவிர மேலும் இரண்டு கதாநாயகிகள், விலை படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி நடித்தார்களா? என்பது எனக்கு தெரியாது என்றார்.
No comments:
Post a Comment