"நீச்சல் குளத்துக்குப் போகிறோம்... கட்டியிருக்கிற புடவை அல்லது சுடிதாருடனேவா இறங்கிவிடுகிறோம்... நீச்சலுடை மாட்டிக் கொள்வதில்லையா... அப்படித்தான் சினிமாவலும். நீச்சலுடை அணிவது எனக்கு ஒரு மேட்டரே இல்லை. கொடுங்க, போட்டுக்கறேன்..."
-நீச்சல் உடை போட மறுத்ததால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலியாமே, என்ற கேள்விக்குத்தான் இப்படி டாப் கியரில் பதிலளித்தார் நடிகை ஷம்மு.
தசாவதாரம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமாகி, காஞ்சிவரத்தில் பேசப்படும் அளவு நடித்தார். ஆனால் அடுத்தடுத்த படங்கள் சறுக்கல். கடைசியாக வந்த மாத்தி யோசி படம், ரசிகர்களை தியேட்டரைவிட்டே விரட்டியடித்தது.
கைவசம் புதிய படங்கள் இல்லாத நிலை.
இந்த நேரம் பார்த்து ஷம்மு கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டாராம், நீச்சல் உடை போட மாட்டாராம் என்றெல்லாம் யாரோ கொளுத்திப் போட, பதறியடித்துக் கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஷம்மு.
அவர் கூறுகையில், "நான் ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை. நடிக்க வந்துவிட்டு அப்படியெல்லாம் சொன்னால் வேலைக்கு ஆகுமா...
நீச்சல் குளத்தில் புடவையுடனா குளிக்க முடியும்? அதனால் தேவையில்லாமல் பிகு பண்ணிக்கொள்ள மாட்டேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாகவும், நீச்சல் உடையிலும் நடிப்பேன். முத்தக் காட்சி இன்று சர்வசாதாரணம். நல்ல கதைகளில் இரண்டு கதாநாயகிகளில ஒருவராகவும் நடிக்க தயார் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசை. புதுமுக நடிகர்களுடனும் நடிப்பேன்.
காஞ்சீவரம் படத்தில் நான் டப்பிங் பேசாமல் போனது துரதிர்ஷ்டம். இதனால் என் பெயர் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படாமல் போய் விட்டது. பணமா முக்கியம்... பெயர்தான் முக்கியம் என்று நினைப்பவள் நான்.
இன்னொன்று அமெரிக்காவில் வளர்ந்தாலும் நான் முழுக்க முழுக்க தமிழ் பெண்தான். தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட எட்டு மொழிகள் தெரியும். பரதம், மேற்கத்திய நடனம், குச்சிபுடி, கிராமிய நடங்களை கற்றுள்ளேன்.
பிரகாஷ்ராஜுடன் நடித்த மயிலு படம் முடிந்து விட்டது. அதில் எனக்கு நல்ல கேரக்டர். அருமையான பாடல்கள். அப்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கும் படமொன்றில் நடிக்க பேசி வருகிறார்கள். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்க உள்ளேன்," என்றார்.
No comments:
Post a Comment