அதிர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறப்பு
இந்த தகவல் இப்போது தான் என்னை வந்து அடைந்தது. இன்னும் சில மணி நேரங்களில் பல செய்தி சேனல்கள் இந்த தகவலை உங்களுக்கு அளிக்கலாம். ஆனால், முதன் முதலில் இந்த தகவலை உங்களுக்கு அளித்தது நான்தான் என்ற விஷயத்திற்காக மட்டுமில்லாமல் ஒரு சமுதாய நோக்கோடும்தான் இந்த செய்தியை வெளியிடுகிறேன்.
இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து போய் கரையை சேர்ந்தன. ஒரே நேரத்தில் இவ்வளவு மீன்களின் அகால மரணம் அப்பகுதியில் இருந்த பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சிறிது நேரத்தில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. மீனவர்கள் பலரும் அச்சத்துடன் கடற்கரையில் இதனை பார்த்தபடி இருக்க அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் காத்து இருந்தனர்.
கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் சில நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவி, பல இடங்களில் இருந்து இதே மாதிரி செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. ஆம், தமிழகத்தின் பல இடங்களிலும் மீன்கள் இறந்துக் கொண்டே இருந்தன. இதோ, மதுரையில் ஒரு ஆற்றில் மீன்கள் இறந்த காட்சி.
சற்று நேரத்தில் அரசாங்க அதிகாரிகளும் தனியார் சுற்று சூழல் ஆர்வலர்களும் இந்த பகுதிகளுக்கு சூழ்ந்து கொண்டு ஆராய துவங்கினர். ஆனாலும் இந்த மர்மம் பிடிபடவில்லை.
பின்னர் பிரபல மீன்வளத்துறை நிபுணரும் நியூசிலாந்து நாட்டின் மீன்வளத்துறை
விஞ்ஞானியுமாகிய டாக்டர் செவன் அவர்கள் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க வந்தார். அவர் மீன்களை ஆராய்ந்த போது எடுக்கப்பட்ட படம் இது.
தன்னுடைய துறைசார்ந்த அறிவின் மூலமாக அந்த நிபுணர் இது மீன்களின் கூட்டு தற்கொலை என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மீன்களின் மரணம் அனைத்தும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது என்பது. இப்படி பல்லாயிரகணக்கான மீன்கள் கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ள காரணம் என்ன?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
Too old.
ReplyDeleteஆஹா இதுவும் காமெடி பீஷா !
ReplyDeleteநான் முதலிலையே சந்தேகப்பட்டேன் . பகிர்வுக்கு நன்றி
உங்கள் வருகைக்கு நன்றி நண்பா