Monday, June 21, 2010

ராவணனால் குழப்பமடைந்த அமிதாப்பச்சன்


தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 18-ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ள படம் ராவணன்.

தமிழில் விக்ரம் ஏற்றுள்ள வீரா பாத்திரத்தை இந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஏற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய் தான் இந்தி, தமிழ் என இரண்டிலும் கதாநாயகி.

ராவணன் குறித்து ஒரு இணைய தளத்தில் அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த படம் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. இந்தப் படத்தை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக்களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம்மிக்கது.

அவர் தொடர்ந்து தனது மிகப்பெரும் ஆற்றலை நமது சினிமாவுக்கு வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவரது படைப்புகளால் நாம் தொடர்ந்து உற்சாகம் அடைவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இப்படி ராவணன் படத்தைப் பார்த்த பிரமிப்பில் அதைப் பாராட்டியுள்ள அமிதாப்பச்சன், படத்தின் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இதுபற்றி அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், ராவணன் (இந்திப்படம்) மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்யப்பட்டபோது படத்தின் முக்கியக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment